
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் 25 வயதுடைய ஹரிஷ், ஹரிஹரன் என்ற இரட்டை சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இருவரும் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கின்றனர். அதே பகுதியில் இரண்டு சிறுமிகள் பெற்றோருடன் வசித்து வருகின்றனர். கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் ஹரிஸும் , ஹரிஹரனும் அந்த சிறுமிகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த சிறுமிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ஹரிசையும், ஹரிஹரனையும் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .