கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை அம்பேத்கர் நகரில் ஒரு சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் மாணவி தினமும் டியூஷனுக்கு சென்று படிப்பது வழக்கம். இந்த நிலையில் டியூஷனுக்கு சென்ற போது டியூஷன் ஆசிரியர் வெங்கடேசன்(42) என்பவர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வெங்கடேசனை கைது செய்தனர்.