திருவாரூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றனர். அப்போது வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இதனை அறிந்த விக்னேஷ் என்ற வாலிபர் வீட்டிற்குள் நுழைந்து 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.