அசாம் மாநிலத்தின் சிராங் மாவட்டம் பிஜ்னி பகுதியில், 60 வயதான ப்ரிட்டேஷ் ஹாஜோங் என்ற கூலி தொழிலாளி, தனது மனைவி பைஜயந்தி ஹாஜோங் (50) என்பவரை தலையறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை மாலை நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது, இருவருக்கும் இடையில் சின்ன குடும்ப தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென கத்தியை எடுத்து மனைவியின் தலையை வெட்டிய ப்ரிட்டேஷ், அதனை ஒரு சைக்கிள் கூடைபையில் வைத்து, அருகிலுள்ள பால்லம்குரி காவல் நிலையத்திற்கு நேராக நடந்து சென்று சரணடைந்துள்ளார்.

இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்தபோது, அவர்களின் இரு மகள்களும் வீட்டிலேயே இருந்துள்ளனர்.  இது தொடர்பாக சிராங் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷத் கர்க், “குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கொலையின் காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது,” என தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக உடல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, கொலையில் பயன்படுத்தப்பட்ட கத்தியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.