
உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மும்பையில் கடந்த 12-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரபலங்கள், இந்திய அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தொழில் அதிபர் அம்பானி அழுத வீடியோ வைரலாக பரவி வருகின்றது. அந்த வீடியோவில், ராதிகா, முகேஷ் அம்பானி நடந்து வந்தார்கள். அப்போது மற்றொருவர் ராதிகாவிடம் விளக்கு ஒன்றை குடுத்தார். இதை பார்த்ததும் அம்பானி கண் கலங்கிய படி நின்று கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
View this post on Instagram