
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதலே செயலி முதல் அலுவலக ஊழியர்கள் வரை அனைத்து விஷயங்களிலும் பல அதிரடியான மாற்றங்களை செய்தார். நிறுவன ஊழியர்களின் முக்கிய அதிகாரிகள் முதல் தூய்மை பணியாளர்கள் வரை அனைவரையும் நீக்கினார். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் கூட பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ]
அதுமட்டுமல்லாமல் நிறுவனத்தின் செலவுகளை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், முன்னதாக ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 20 வாரங்களாக இருந்தது இந்த நிலையில் தற்போது அதை எலான் மஸ்க் இரண்டு வாரமாக அதாவது வெறும் 14 நாட்களாக குறைத்துள்ளார். இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.