
சத்தீஸ்கரில் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட வாக்குப்பதிவு வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மகளிருக்கு வருடத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று நம் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், ஏழை மக்களுக்காக பாஜக ஏதும் செய்யவில்லை எனவும் காங்கிரஸ் அனைவருக்கும் ரேஷன் கார்டுகளை வழங்கியது என்றும் தெரிவித்துள்ளார்.