
8வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி கடந்த 11 ஆம் தேதி பிஹாரில் இருக்கும் ராஜ்கீர் நகரில் தொடங்கியது. இந்த போட்டி வருகிற 20-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா, தென்கொரியா, தாய்லாந்து என 6 அணிகள் பங்கேற்றுள்ளது.
இதில் இந்திய அணி மலேசியாவுடன் விளையாடிய முதல் போட்டியிலும் தென்கொரியாவுடன் நடந்த இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றது. அதேபோன்று நேற்று தாய்லாந்து அணியுடன் மோதிய இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மேலும் நாளை சீனாவுடன் இந்தியாவின் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.