
தமிழகத்தில் மகளிர் உதவித்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கை அஞ்சலகங்களிலும் தொடங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமை திட்ட பயனாளிகள், 100 நாள் வேலை திட்டம், பிரதமரின் கிசான் மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களின் பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு அவசியமாகும். அதற்கு இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியில் கணக்கு தொடங்கலாம் எனவும் அவ்வாறு தொடங்கப்படும் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை எதுவும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கைபேசி பயோமெட்ரிக் சாதனத்தின் மூலமாக பயனாளிகள் தங்களின் ஆதார் எண் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை கொண்டு விரல் ரேகை மூலம் சில நிமிடங்களில் கணக்கு தொடங்கி விடலாம். எனவே மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி உள்ள பயனாளிகள் மாதாந்திர உரிமை தொகையை அருகில் உள்ள அஞ்சலகங்களில் தபால்காரர் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.