
தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகையின் 9ஆவது தவணை ரூ.1000, வரும் சனிக்கிழமை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழகத்தில் 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதந்தோறும் 15ம் தேதி ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், புதிய ரேஷன் அட்டை பெற்றவர்களும் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான பெண்களுக்கு அடுத்தடுத்த மாதங்களில் ரூ.1000 வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்