
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.
இந்த நிலையில் வங்கி கணக்கில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை செலுத்தப்படுவதால் பெண்களின் சேமிப்பு உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் சேமிப்பு கணக்குகளால் தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் புதிய அஞ்சலகங்கள் திறக்கப்படுகின்றது. குறைந்தபட்ச இருப்பு தொகை பிரச்சனை இல்லை மற்றும் எளிதாக பணத்தைப் பெற முடியும் என்பதால் கிராமப்புற பெண்கள் பலரும் புதிய கணக்குகள் தொடங்குவதால் அஞ்சல் துறையின் வருவாயும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.