
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை வேறு குடும்பத்தினர் பயன்படுத்தக் கூடாது எனவும் விண்ணப்பம் வழங்கிய பிறகு குடும்ப உறுப்பினரிடம் உரிய படிவத்தில் கையெழுத்து பெற வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளுக்கும் விண்ணப்பங்களை வழங்காமல் தேதி நிர்ணயம் செய்து திட்டமிட்டு அளவிற்கு விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.
எக்காரணத்தைக் கொண்டும் நியாய விலை கடைகளுக்கு தொடர்பு இல்லாத நபர்களை விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. வெளி நபர்கள் விண்ணப்பம் வழங்குவதற்கு அனுமதி இல்லை. விண்ணப்பங்களை பயனாளிகள் மட்டுமே ரேஷன் கடைக்கு எடுத்து வர வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இருந்தாலும் ஒருவர் மட்டுமே குடும்ப தலைவியாக கருதப்படுவார். எனவே ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் ஜனா தமிழக அரசு தெரிவித்துள்ளது.