
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்ட வருகிறது. இதன் மூலம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம்தோறும் 15ஆம் தேதி ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இரண்டாம் கட்டமாக சிலர் விண்ணப்பித்த நிலையில் அவற்றிலும் தகுதி வாய்ந்த விண்ணப்பங்களை தேர்வு செய்து உரிமைத்தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இன்று, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக செய்தி ஒன்று பரவி வருகிறது.
அதாவது பெண்களிடம் மகளிர் உரிமை தொகை தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்படுவதுடன் அந்த விண்ணப்பங்கள் முழுமையாக ஏற்கப்படும் என ஒரு போஸ்டருடன் அந்த செய்தி வைரல் ஆகிறது. இதனை நம்பி பெண்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குவிந்தனர். குறிப்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகமான அளவில் பெண்கள் குவிந்தனர். இதன் காரணமாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகும் போஸ்டரை யாரும் நம்ப வேண்டாம். மேலும் அது வெறும் வதந்திதான். எனவே அது போன்ற போலி செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.