
மகளிர் உரிமைத் தொகை திட்டம் சிறந்த பொருளாதார யுக்தி என்று சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பாராட்டியுள்ளார். மேல் தட்டில் இருந்து கொண்டு இந்த திட்டத்தை கொச்சைப்படுத்தும் அவர்களுக்கு ஆயிரம் ரூபாயின் அருமையும் ஏழைகளின் கஷ்டமும் தெரியாது. முக்கியமாக அவர்களுக்கு எந்த பொருளாதாரமும் தெரியாது என்று கூறியுள்ளார். தண்ணீரை வீணடிக்காமல் செடிகளுக்கு சொட்டு நீர் பாசனம் மூலமாக நீர் பாய்ச்சுவது போல ஒவ்வொரு வீட்டுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது. இந்த பணத்தால் உள்ளூர் பொருளாதாரம் தான் வளர்கிறது என கூறியுள்ளார்.