தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைக்காக திட்டத்தில் மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏற்கனவே ஒரு கோடி 6 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது புதிதாக 1.48 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த திட்டத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உண்ணத்தக்கள் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் மேலும் விரிவு படுத்தப்பட உள்ளதாகவும் இந்த முறை இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும் குறிப்பாக தமிழகத்தில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.