
தமிழகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என கடந்த 3 மாதங்களாகவே தகவல்கள் வெளிவந்த நிலையில் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதாவது முதல்வர் ஸ்டாலின் தமிழக அமைச்சரவை மாற்றும் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதிவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் துணை முதல்வர் ஆக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமை தொகை மற்றும் இலவச பேருந்து என பெண்கள் நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்றார். மேலும் நடப்பாண்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 35 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.