
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் தாலுக்கா தம்மரொட்டி பாளையத்தில் நடராஜ்(55) என்பவர் வசித்து வருகிறார். அதே ஊரில் குமாரசாமி(53) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு நடராஜின் மகளுக்கு குமாரசாமி காதல் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதனால் கோபத்தில் நடராஜ் குமாரசாமியை கடப்பாரையால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடராஜுக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.