ரக்ஷா பந்தன் பண்டிகை முன்னிட்டு உத்திர பிரதேச மாநில பெண்களுக்கு முதல்வர் யோகி மிகப்பெரிய சர்பிரைஸ்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது  கன்யா சுமங்கலா யோஜனா திட்டத்தின் பயனாளிகள் உடைய தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கான நிதி உதவியை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதாக கூறியுள்ளார் .இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், இந்த திட்டத்தின் கீழ் ஆறு கட்டங்களாக பதினைந்தாயிரம் ரூபாய் தொகை வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டு முதல் குழந்தை பிறந்தவுடன் அவருடைய பாதுகாவலர் கணக்கில் 5000 ரூபாய் பணம் மாற்றப்படும். அதைப் போல ஒரு குழந்தைக்கு ஒரு வயது நிறைவடையும் பொழுது 2000 ரூபாய் ,மகள் முதல்  வகுப்பிற்கு சேரும்பொழுது 3000, ஆறாம் வகுப்பில் சேரும்பொழுது 3000, ஒன்பதாம் வகுப்பில் செல்லும்போது 5000, கல்லூரி படிக்கும் போது 7000 ரூபாய் அரசு கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.