
திருவொற்றியூர் காலடிப்பேட்டை அய்யா பிள்ளை தோட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான குணசேகரன் என்பவருடைய மனைவி சுதா. இவர் வீட்டு வேலை பார்த்து வந்த நிலையில் இவருக்கு 17 வயதில் ராகவி என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர் மகளை கண்டித்தனர். இதனால் விரத்தி அடைந்த ராகவி கடந்த ஜூலை 15ஆம் தேதி காதலனுடன் செல்போனில் பேசிவிட்டு அரைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் சுதா மகள் இறந்த துக்கம் தாங்காமல் சோகத்தில் இருந்து வந்த நிலையில் நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.