
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்வு நடந்து முடிந்த நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது. பாஜக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் மகாயுதி கூட்டணி ஆட்சி அமைக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் இருக்கும் நிலையில் 234 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதே சமயத்தில் காங்கிரஸ் கூட்டணி குறைந்த அளவில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்குமே கிடைக்கவில்லை.
அதாவது எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற குறைந்தபட்சம் 10 சதவீதம் எம்எல்ஏக்களை பெற வேண்டும். அதாவது 288 தொகுதிகளில் 28 எம்.எல்.ஏக்கள் எந்த கட்சிக்கு இருக்கிறதோ அந்த கட்சிதான் எதிர்கட்சி அந்தஸ்தை பெறும். ஆனால் எந்த கட்சிக்கும் 28 எம்எல்ஏக்கள் கிடைக்கவில்லை. அதன்படி காங்கிரஸ் 16 இடங்கள், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்கள், உத்தவ் தாக்கரே சிவசேனா 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி இல்லாமல் பாஜக ஆட்சி அமைக்க இருக்கிறது. இது பாஜகவுக்கு பலமாக பார்க்கப்படுகிறது.