நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி அதாவது நாளை கொண்டாடப்பட உள்ளது. வருடம் தோறும் மகாவீர் ஜெயந்திக்கு நாடு முழுவதும் அரசு விடுமுறை விடப்படும். அதன்படி தமிழகத்தில் நாளை பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அவரைப் போலவே தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும். விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.