
தமிழகத்தில் இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் இன்று பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெறும். இதனால் பூக்களின் தேவை என்பது அதிகரித்துள்ளதால் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.
அதன்படி மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இங்கு ஒரு கிலோ மல்லிகை பூ 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிலோ பிச்சி பூ 800 ரூபாய்க்கும் முல்லைப் பூ கிலோ ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.