இந்தியாவில் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான திட்டங்கள் உள்ளன. இந்நிலையில் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்கள் மூலம்பெறப்படும் வட்டி மீதான வரி விதிப்பு பற்றிய ஒரு தெளிவான அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி ஒரு நிதியாண்டில் இந்த சான்றிதழ்கள் மூலம் பெறப்பட்ட வட்டி 40000 ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் வருமான வரி பிடித்த விதி இதற்கு பொருந்தாது. இது பெண்களை அதிக அளவில் முதலீட்டில் ஈடுபடுவதற்கு ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது. இது வட்டி வருவாய் மீதான வருமான வரி பிடித்த விலக்கினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.