
சென்னை வளசரவாக்கம் பகுதியில் வினோத் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருடன் காரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலுக்கு மகிழ்ச்சியாக சென்றார். இவர் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மழை பெய்தது. இவர்கள் செங்கல்பட்டு அருகே படாளம் கூட்ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் லோடு ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி ஒன்று காரின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரின் பின்புறம் அப்பளம் போல் நொறுக்கியது. இந்த விபத்தில் சிறுவன் சச்சின் மற்றும் பார்வதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதன்பிறகு 5 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.