அரசு மற்றும் தனியார் ஊழியர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையில் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகையானது அவர்கள் பெரும் ஊதியத்தை பொறுத்து இருக்கும். இந்த தொகை பணிக்காலம் நிறைவடைந்த பிறகு மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். இதில் பல்வேறு சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பயனர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இனி பி எஃப் கணக்கில் வாரிசுதாரர்களை சேர்க்கவும், புதுப்பிக்கவும் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிதி நிறுவனங்கள் சார்பாக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து தனக்கு தெரிய வந்ததாகவும், எனவே விதிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும் பிரிவு நீக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.