
மக்களவையில் இரண்டு பேர் அத்துமீறிய விவகாரத்தின் எதிரொலியாக மத்திய உள்துறை சிறப்பு செயலருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தின் முழு பாதுகாப்பையும் ஆய்வு செய்ய வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் நாடாளுமன்றத்தில் இருவர் அத்துமீறியது குறித்து ஜனாதிபதியை சந்திக்க எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய அமைச்சர் அமிஷாவின் அறிக்கையை எதிர்க்கட்சிகள் கோர உள்ளன.