
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று வங்கிகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கிடைக்காது. அதே சமயத்தில் பால், குடிநீர், மளிகை, காய்கறி, மருந்து பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும் பேருந்து போக்குவரத்திற்கும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.