தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணம் விநியோகிக்க அலுவலர்களுக்கு இன்று பயிற்சி அளிக்கப்படுகின்றது. பணத்தை முறையாக வழங்குவது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.