தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை முதல் மழை பெய்து வருகிறது. வருகிற 14-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இன்று பிற்பகல் ஒரு மணி வரையில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை,திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இதே போன்று மதுரை, திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.