
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னனுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்பிறகு கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு ஜூன் 9-ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழக மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.