
மின்சாரம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். கோடைக்காலம் தற்போது நெருங்கி விட்டது கோடை காலம் நெருங்க நெருங்க மின்சார தேவையும் மின்தடையும் அதிகமாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் தான் மின்கட்டணமும் அதிகமாக இருக்கும். ஏனென்றால் வீடுகளில் மின்விசிறி, ஏசிகளை அதிகமாக இயக்குவார்கள். இந்த நிலையில் மின்கட்டண கவலை போக்கும் விதமாக மத்திய அரசு கொண்டுவந்த சூப்பர் திட்டத்தை குறித்து பார்க்கலாம். அதாவது மக்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்கவும், புதுப்பிக்கதக்க எரிசக்தி வளத்தை அதிக ம் பயன்படுத்துவதை நோக்கமாகவும் கொண்டு பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டின் மேலும் சோலார் பேனர்கள் அமைப்பதற்காக மத்திய அரசு மானியம் கொடுக்கிறது. 2 கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சோலார் பேனல்களை அமைத்தால் அதன் விலையில் 60% மானியம் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைபவர்களை ஊக்குவிக்கும் விதமாக 300 யூனிட் மின்சாரம் அரசால் இலவசமாகவே கொடுக்கப்படுகிறது. சோலார் பேனல்களை அமைப்பதன் மூலமாக தேவைக்கு போக கிடைக்கும் மிச்ச மின்சாரத்தை வெளியே விற்பதன் மூலமாகவும் வருமானம் ஈட்டலாம். இந்த திட்டத்தின் மூலம் பயனடைவதற்கு https://pmsuryaghar.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.