நாடு முழுவதும் உள்ள சில மொபைல் பயனர்களுக்கு நேற்று(வியாழக்கிழமை)மதியம் “அவசர எச்சரிக்கை” என்ற செய்தி ஒன்று வந்துள்ளது. இந்த குறுஞ்செய்தி எதற்காக வந்தது என்று பயனர்கள் குழம்பியுள்ளார்கள். இருப்பினும், இது மத்திய அரசால் அனுப்பப்பட்டது என்றும், அவசரகால சோதனையின் ஒரு பகுதியாக இந்த செய்தி வந்துள்ளது என்றும் கூறியுள்ளது.

பேரிடர்களின் போது மக்களை எச்சரிக்கும் வகையில் இந்த அமைப்பை மத்திய அரசு வடிவமைத்துள்ள நிலையில், இது சமீபத்தில் சோதனை அடிப்படையில் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கவலைப்பட தேவையில்லை.