
தமிழகத்தில் புயல் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பல்வேறு இடங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மக்கள் உதவிக்காக தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. உதவி தேவைப்படுவோர் கட்டணமில்லா எண் 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் 044 25619204, 044 25619206, 044 25619207, 9445477205 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது