தமிழகத்தில் இன்று இரவு 10:00 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இன்று மற்றும் நாளை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.