தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதேபோன்று 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டம் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.