
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்த வகையில் இன்று இரவு 10:00 மணி வரையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அதன்படி பெரம்பலூர், நாமக்கல், தஞ்சாவூர், விருதுநகர், மதுரை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.