தமிழகத்தில் பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்று வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இன்று மற்றும்  நாளை சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் இன்று இரவு 10:00 மணி வரை தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இதேபோன்று ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.