தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தற்போது அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தற்போது தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக புதிதாக டானா புயல் உருவாகவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

இதைத்தொடர்ந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இன்று இந்த 3 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நாளை ஈரோடு, திருப்பூர், நீலகிரி, திருச்சி, மதுரை, கரூர், கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.