
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு விக்சித் பார்த் சம்பர்க் என்ற பெயரில் மத்திய பாஜக அரசு whatsapp மெசேஜ் அனுப்பி வருகின்றது. இந்த நிலையில் இதே பெயரை பயன்படுத்தி சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடி செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மக்களிடம் கருத்து கேட்பது போல அவர்களது செல்போனில் உள்ள தகவல்கள் மற்றும் பணத்தை திருடுவதாகவும் புகார் இருந்துள்ளது. விகாசித் பாரத் செய்தி 9275536906 மற்றும் 9275536919 எண்களுடன் மட்டுமே வரும் என்றும், மற்ற எண்களுடன் வந்தால் அது போலியானது என்றும் பதில் அளிக்க வேண்டாம் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.