
மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் 145 மருந்துகளை தரமற்றதாக அறிவித்துள்ளது. அதன்படி சர்க்கரை நோய், சளி மற்றும் கிருமி உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக பயன்படுத்தப்படும் மருந்துகள் தர மற்றவை என்பது தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளையும் மத்திய அரசு ஆய்வு செய்யும் நிலையில் தரமற்றவை விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துகளை சோதனை செய்ததில் சளி, கிருமி, சர்க்கரை நோய், ஜீரண மண்டல பாதிப்பு மற்றும் வைட்டமின் குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் 145 வகையான மருந்து மாத்திரைகள் தரமற்றவை என்பது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலானவை உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும். மேலும் இந்த மருந்தின் முழு விவரங்களையும் மத்திய அரசு cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.