டெல்லியில் தண்ணீரை வீணடித்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். தண்ணீரை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு டெல்லி முழுவதும் 200 குழுக்களை உடனடியாக நியமிக்க தலைமை நிர்வாகிக்கு அறிவுறுத்தியுள்ள அவர், தண்ணீர் குழாய்கள் மூலம் வாகனங்களை கழுவுதல் மற்றும் தண்ணீர் தொட்டிகள் நிரப்பி வீணாவது, கட்டுமான அல்லது வணிக நோக்கங்களுக்காக நீர் விநியோகிப்பதை பயன்படுத்துதல் ஆகியவற்றை இந்த குழு கண்காணிக்கும் என தெரிவித்துள்ளார்.