
தமிழகம் முழுவதும் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின் இணைப்பு துண்டிக்கப்படும். இது தொடர்பாக மக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 4 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது.
அதன்படி கரூர் மாவட்டத்திலுள்ள செல்வம் நகர், தில்லை நகர், போகவரத்து நகர், தமிழ் நகர், எஸ் வெள்ளாளப்பட்டி, நரிக்கட்டியூர், சனபிராட்டி, சிட்கோ, வையாபுரி கவுண்டனூர், மேலடை, சின்ன கனத்துப்பட்டி, காளியப்ப கவுண்டனூர், வேலாயுதம்பாளையம், சாலப்பட்டி, உப்பிடமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.
அதன்பிறகு திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒய்க்கரை, பச்சை பெருமாள் பட்டி, பேட்டை, வளையத்தூர், சக்கம்பட்டி, ஆரைச்சி, மாணிக்கம் புதூர், எஸ் என் புதூர், கே புதூர், மேட்டூர், வி ஏ சமுத்திரம், கோட்டை பாளையம், திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
இதனையடுத்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவைப்புதூர், புட்டு விக்கி, சுந்தராபுரம், குனியமுத்தூர், மந்திரி பாளையம், வதம்பச்சேரி, வட வேடம்பட்டி, மலப்பாளையம், குமாரபாளையம், பி ஜி பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். மேலும் அங்கலம் குறிச்சி, செலோன் காலனி, கம்பாலம்பட்டி, தென் சங்கம்பாளையம், கோட்டூர், நஞ்ச நாயக்கனூர், அலியார், என் எம் சுங்கம், சோமந்துறை சித்தூர், பரம்பிக்குளம், டாப்ஸ்லிப், சாத்துமடை, பொங்கலியூர் ஆகிய பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.