
தமிழகத்தில் சமீப காலமாக மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தினசரி 50-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு மட்டும் 7500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மாநிலம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் நாமக்கல், தஞ்சை, நெல்லை, மதுரை, தேனி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு பரவலாக இருக்கிறது. தினசரி 30 பேர் முதல் 50 பேர் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். மேலும் இதனால் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருப்பதோடு வீடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சுகாதாரமாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.