
சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி வீரத்தம்மன் கோவில் தெருவில் ஆட்டோ டிரைவரான அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜல்லடியன்பேட்டை சுப்பிரமணி நகரை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் இணைந்து கடந்த 1 ஆண்டுக்கு மேலாக பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டை ஆகிய பகுதிகளில் மாதாந்திர சீட்டு, குலுக்கல் சீட்டு மற்றும் மகளிர் குழு நடத்தி வந்தார். இவர்களை நம்பி அந்த பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சீட்டு கட்டி வந்தனர்.
இந்த நிலையில் சீட்டு முடிந்த பிறகு அசோக்குமாரும், மகாலட்சுமியும் சம்மந்தப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட நபர்கள் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், அசோக்குமாரும் மகாலட்சுமியும் இணைந்து 1.50 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து கார் புல்லட் மற்றும் இரண்டு ஆட்டோக்கள் வாங்கி ஆடம்பரமாக இருந்தது தெரியவந்துள்ளது. இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.