
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் பகுதியில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் மோசடிக்காரர்களின் போலியான இணையதளத்தை நம்பி ஆன்லைன் புத்தகத்தில் 45 லட்ச ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றமடைந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சைலேஷ் குப்தா, ருஸ்தம் அலி ஆகியோர் மோசடி செய்தது தெரியவந்தது. கடந்த 23-ஆம் தேதி தனிப்படை போலீசார் மேற்கு வங்கம் சென்று சைலேஷ் குப்தா, ருஸ்தம் அலி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.