
தமிழகத்தில் நாளை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை. இதனால் நாளைய தினம் வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் செயல்படாது. அதன்பிறகு இடையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாள். இதற்கு அடுத்தபடியாக சனி, ஞாயிறு விடுமுறை. வரும் சனிக்கிழமை இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படாது. இதைத்தொடர்ந்து ஞாயிறு விடுமுறையாக இருக்கும் நிலையில் இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொது விடுமுறை.
இதனால் அன்றைய தினமும் வங்கிகள் செயல்படாது. மேலும் வங்கிகளுக்கு தொடர்ந்து விடுமுறை வரும் நிலையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் தான் வேலை நாள். எனவே இதனை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் வங்கி பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.