திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட் அலர்ட் என்பது கடந்த டிசம்பர் மாதம் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கக்கூடிய முக்கிய நீர் வீழ்ச்சிகளான அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் காட்டாறு அடித்துச் செல்லக்கூடிய தலையணை உள்ளிட்ட வனப்பகுதிகளுக்கு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல், குளம் , ஆறு உள்ளிட்ட எந்த ஒரு நிர்நிலைகளுக்குள்ளும் மக்கள் இறங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கட்டாயமான முறையில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.