வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவான நிலையில் அது தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை, திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பரவலான மலைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.