தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் சிறப்பு விற்பனை தொகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தொடங்கி வைத்துள்ளார். அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு துறைகள் மூலமாக பொது மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த சிறப்பு தொகுப்பு 199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை, நெய் மற்றும் பாசி பருப்பு அடங்கிய 7 பொருட்கள் கொண்ட இனிப்பு பொங்கல் தொகுப்பு 199க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று மற்றொரு சிறப்பு தொகுப்பு 499 விலையில் விற்பனை ஆகிறது. மேலும் அதன்படி இந்த தொகுப்பில் மஞ்சள் பொடி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, சர்க்கரை, தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய்த்தூள், கடலை எண்ணெய் மற்றும் உளுந்தம் பருப்பு ஆகிய 35 பொருட்கள் அடங்கிய தொகுப்பு 499க்கு விற்பனை செய்யப்படுகிறது.