தமிழகத்தில் இன்று கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல  கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் வருகிற 12-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் உள் மாவட்டங்களில் வறண்ட வானில் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு தமிழகத்தில் இன்று மற்றும் நாளை காலை வேளையில் பனிமூட்டம் காணப்படுவதோடு நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும். மேலும் 12ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 11-ம் தேதி மட்டும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.